Skip to main content

கவிப்புயலின் இரண்டு வரிக்கவிதைகள்

 

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை 
வானம் கதறி அழுதாள் - அடைமழை 

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் 
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் 

|||||||

விவசாயியின் நண்பன் - மழை 
வியாபாரியின் எதிரி -மழை 

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது

^^^^^^

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................காதல்........................!!!

காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!

-----

உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!

-----

உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!

-----

காற்றிருந்தால்  பட்டம் பறக்கும்
காதல் இருந்தால்  வாழ்க்கை சிறக்கும்....!

-----

காதலில் நினைவுகள் முற்கள் 
கனவுகள் வாசனைமலர்கள் ....!

@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................நட்பு........................!!!

அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று  நட்பு இல்லையென்றால் ... 
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!

@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................அம்மா........................!!!

எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^

அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^

உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!

^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!

^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!


@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன கவிதைகள்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

சின்ன கவிதைகள்